2020 ஆண்டுகளுக்கு அப்பால் APJ Abdul Kalam YS Rajan

அப்துல் கலாம் நாட்டிற்கு கொடுத்த பரிசான, ‘பியாண்டு 2020’ நுாலில், உலக அளவிலான பல விஷயங்கள் பொதிந்துள்ளன,” என, பேராசிரியர் ய.சு.ராஜன் பேசினார்.நுால் வெளியீடுராமலிங்கர் பணி மன்றம், ஏவி.எம்., அறக்கட்டளை இணைந்து நடத்தும், 50ம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழா, மயிலாப்பூரில் நடந்து வருகிறது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம், ‘மகாத்மா காந்தியடிகள் திருநாள்’ என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. மாலையில் நடந்த நுால் அரங்கில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பெங்களூரு, இஸ்ரோ, சிறப்பு நிலை பேராசிரியர் ய.சு.ராஜன் இணைந்து எழுதிய, ‘பியாண்டு 2020’ என்ற நுாலின் தமிழ் மொழிபெயர்ப்பான, ‘2020 ஆண்டுகளுக்கு அப்பால்’ என்ற நுால் வெளியிடப்பட்டது.விழாவிற்கு தலைமை ஏற்ற ய.சு.ராஜன், நுாலை வெளியிட்டு பேசியதாவது:அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்புமையம், டாக்டர் கலாமின் நுாலை தமிழில் மொழிபெயர்த்து, நாட்டிற்கு மிகப்பெரிய சேவையாற்றி உள்ளது.

தமிழ் மீது, அளவற்ற பற்று கொண்டவர் கலாம். அவர், இந்த தமிழாக்க நுாலை பார்க்கவில்லையே என்ற மிகப்பெரிய வருத்தம் உள்ளது. இந்த நுால், உலக அளவில் பல விஷயங்களை தரும். அதை, இந்தியாவிற்கு எப்படி பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. டாக்டர் கலாம், நாட்டிற்கு கொடுத்த பரிசு இந்தநுால். அனைத்து மொழியிலும் வெளிவர வேண்டும்; விக்கிபீடியா மூலம் வெளிவர வேண்டும். இந்தியாவிற்கு வேண்டிய அவசியமான நுால், ‘பியாண்டு 2020’ல் செய்யாததை குறை கூறுவதாக இல்லை. செய்ய வேண்டியதற்கு வரும் வாய்ப்புகளை நழுவ விடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், தனி மனிதர் செய்ய வேண்டியது என்ன என்பதையும் தெளிவாக விளக்கி கூறப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.அப்துல் கலாமின் பேரன்களான ஷேக் தாவூத், ஷேக் சலீம் ஆகியோர் நுாலின் முதற்படியை பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் பர்வீன் சுல்தானா, நுால் திறனாய்வுரை செய்து பேசியதாவது:இந்த நுால், இளைஞர்களின் வேத நுால். 2020க்கு பிறகு இந்தியா எப்படி வர வேண்டும் என்பதை விளக்குகிறது.

15 அத்தியாயங்களை கொண்ட இந்த நுால் அரசியல் துறை படிப்பவர்களுக்கும், சட்டத்தை படிப்பவர்களுக்கும் பாடமாக வர வேண்டும். கலாமின் மன தரிசனத்தை இந்நுாலில் காணலாம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய விலை மதிப்பற்ற பரிசுப் பொருள்.இவ்வாறு அவர் பேசினார்.நுாலை தமிழாக்கம் செய்தசிற்பி பாலசுப்பிரமணியம் ஏற்புரை வழங்கினார். நாட்டிற்கு சேவைநீதியரசர் ராமசுப்பிரமணியம், அருட்செல்வர் நினைவுப் பேருரையாற்றி பேசியதாவது: மகாத்மா கடைசியாக அணிந்திருந்த ஆடை, கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள், மதுரை காந்தி மியூசியத்தில் இருக்கின்றன; அதன் பாதுகாவலராக அருட்செல்வர் இருந்துள்ளார். அவரின் நுால்களை படித்து பார்த்தால் அதில், மகாத்மாவையும், வள்ளலாரையும் இரு கண்களாக போற்றியது தெளிவாகத் தெரியும். நாட்டின் பாரம்பரியம், தேசப்பற்று, மொழிப்பற்று, வீட்டில் ஒழுக்கம், நாட்டிற்கு சேவை ஆகியவற்றை ஒரு தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என உழைத்தவர் அருட்செல்வர்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, ராமலிங்கர் பணி மன்றத் தலைவர் மாணிக்கம் வரவேற்றார். செயலர் வைத்தியலிங்கம் நன்றி கூறினார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s