Green Energy – Innovation and Development

48 ஆவது உலகச் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு
“பசுமை ஆற்றலில் புதியன கண்டுபிடித்தல் மற்றும் தர மேம்பாடு” எனும் தலைப்பில் இணையதளக் கருத்தரங்கு

இராமேஸ்வரம் கலாம் இல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாக்டர் ஆ ப ஜெ அப்துல்கலாம் பன்னாட்டு அறக்கட்டளை 48 ஆவது உலகச் சுற்றுச் சூழல் தினத்தில் இணையதளக் கருத்தரங்கு நடத்திச் சிறப்பித்தது. “பசுமை ஆற்றலில் புதியன கண்டுபிடித்தல் மற்றும் தர மேம்பாடு” எனும் தலைப்பில் இக்கருத்தரங்கு 2020 ஜூன் 6 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் சென்னை ஐஐடி மின்னியல் துறையைச் சார்ந்த பேராசிரியர் பத்மஸ்ரீ அசோக் ஜூன்ஜூன்வலா, மகேந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் பாபு, SRISTI யின் ஒருங்கிணைப்பாளரும் கியான் செயலாளருமான பேராசிரியர் பத்மஸ்ரீ அணில் கே குப்தா, ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிரிவின் துணைத் தலைவர் பி சி டாட்டா, சல்காம்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சசிகுமார் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அப்துல் கலாம் பன்னாட்டு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்களும், அப்துல்கலாம் அவர்களின் பேரர்களுமான ஷேக் சலீம், ஷேக் தாவூத் ஆகியோர் வரவேற்புரையும், கருத்தரங்க தொடக்க உரையும் நிகழ்த்தினர்.
இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமானது டாக்டர் கலாம் அவர்களின் விஷன் 2020 திட்டங்களுடன், புதைப்படிம எரிபொருளை சார்ந்திருத்தலைக் குறைத்து, சூரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றல் ஆகியவற்றின் கட்டுமானங்களை தகுந்த தரத்துடன் உருவாக்குதல் பற்றிய உத்திகளை முன்னெடுத்து நடைபெற்றது. தற்போது பயன்பாட்டில் உள்ள 5% புதுப்பிக்கத்த ஆற்றலானது 28% ஆக உயர்த்தவும், அதே நேரத்தில் 75% ஆக உள்ள புதைப்படிம ஆற்றலின் அளவை 50% ஆகக் குறைக்கவும் விவாதிக்கப்பட்டது.


பேராசிரியர் அசோக் ஜூன்ஜூன்வலா பேசும்போது இந்தியாவில் மின் மற்றும் சூரிய ஆற்றல் கொண்டு வெகுதூரம் பயணிக்க முடியாது என்றும், ஆதலால் முறையாகப் பயன்படுத்துதல், செயல்பாட்டுச் செலவு, மற்றும் ஆற்றல் சேமிப்பதற்கான செலவு ஆகிவற்றை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மின் வாகனங்களின் பயணச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவு குறைவு, மேலும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது. எதிர்காலத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மின் வாகனங்களே சரியான தேர்வாக இருக்கும். ஏனெனில் அதன் செலவீனங்கள் மிக மிக குறைவு. பணத்தைச் சேமித்து இயற்கையைப் பாதுகாப்போம் என அவர் நிறைவாகக் கூறினார்.

மேலும் அடித்தள புதுமுறை உருவாக்கம்(இயக்குதல்) பற்றி அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அடித்தள புதுமுறை உருவாக்கம்(இயக்குதல்) என்பது அடிப்படை கல்வி இல்லாதவர்களும் முறையாக வசதிகளை பயன்படுத்த இயலாதவர்களும் புதியன உருவாக்குபவர்களாகவும் கண்டுபிடிப்பாளர்களா௧வும் உள்ளவர்களை நோக்கி நமது கவனத்தை செலுத்துதல். பல அடித்தள புதுமுறை உருவாக்கத் திட்டங்கள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளன என விவாதித்தனர்.

Facebook :- https://www.facebook.com/AKIFupdates
Instagram:- https://www.instagram.com/apjabdulkalamfoundation
https://www.linkedin.com/in/apj-abdul-kalam-foundation-046360191/
Twitter:-https://twitter.com/APJAbdulKalam/
Website :- https://www.apjabdulkalamfoundation.org

2020 ஆண்டுகளுக்கு அப்பால் APJ Abdul Kalam YS Rajan

அப்துல் கலாம் நாட்டிற்கு கொடுத்த பரிசான, ‘பியாண்டு 2020’ நுாலில், உலக அளவிலான பல விஷயங்கள் பொதிந்துள்ளன,” என, பேராசிரியர் ய.சு.ராஜன் பேசினார்.நுால் வெளியீடுராமலிங்கர் பணி மன்றம், ஏவி.எம்., அறக்கட்டளை இணைந்து நடத்தும், 50ம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழா, மயிலாப்பூரில் நடந்து வருகிறது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம், ‘மகாத்மா காந்தியடிகள் திருநாள்’ என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. மாலையில் நடந்த நுால் அரங்கில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பெங்களூரு, இஸ்ரோ, சிறப்பு நிலை பேராசிரியர் ய.சு.ராஜன் இணைந்து எழுதிய, ‘பியாண்டு 2020’ என்ற நுாலின் தமிழ் மொழிபெயர்ப்பான, ‘2020 ஆண்டுகளுக்கு அப்பால்’ என்ற நுால் வெளியிடப்பட்டது.விழாவிற்கு தலைமை ஏற்ற ய.சு.ராஜன், நுாலை வெளியிட்டு பேசியதாவது:அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்புமையம், டாக்டர் கலாமின் நுாலை தமிழில் மொழிபெயர்த்து, நாட்டிற்கு மிகப்பெரிய சேவையாற்றி உள்ளது.

தமிழ் மீது, அளவற்ற பற்று கொண்டவர் கலாம். அவர், இந்த தமிழாக்க நுாலை பார்க்கவில்லையே என்ற மிகப்பெரிய வருத்தம் உள்ளது. இந்த நுால், உலக அளவில் பல விஷயங்களை தரும். அதை, இந்தியாவிற்கு எப்படி பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. டாக்டர் கலாம், நாட்டிற்கு கொடுத்த பரிசு இந்தநுால். அனைத்து மொழியிலும் வெளிவர வேண்டும்; விக்கிபீடியா மூலம் வெளிவர வேண்டும். இந்தியாவிற்கு வேண்டிய அவசியமான நுால், ‘பியாண்டு 2020’ல் செய்யாததை குறை கூறுவதாக இல்லை. செய்ய வேண்டியதற்கு வரும் வாய்ப்புகளை நழுவ விடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், தனி மனிதர் செய்ய வேண்டியது என்ன என்பதையும் தெளிவாக விளக்கி கூறப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.அப்துல் கலாமின் பேரன்களான ஷேக் தாவூத், ஷேக் சலீம் ஆகியோர் நுாலின் முதற்படியை பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் பர்வீன் சுல்தானா, நுால் திறனாய்வுரை செய்து பேசியதாவது:இந்த நுால், இளைஞர்களின் வேத நுால். 2020க்கு பிறகு இந்தியா எப்படி வர வேண்டும் என்பதை விளக்குகிறது.

15 அத்தியாயங்களை கொண்ட இந்த நுால் அரசியல் துறை படிப்பவர்களுக்கும், சட்டத்தை படிப்பவர்களுக்கும் பாடமாக வர வேண்டும். கலாமின் மன தரிசனத்தை இந்நுாலில் காணலாம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய விலை மதிப்பற்ற பரிசுப் பொருள்.இவ்வாறு அவர் பேசினார்.நுாலை தமிழாக்கம் செய்தசிற்பி பாலசுப்பிரமணியம் ஏற்புரை வழங்கினார். நாட்டிற்கு சேவைநீதியரசர் ராமசுப்பிரமணியம், அருட்செல்வர் நினைவுப் பேருரையாற்றி பேசியதாவது: மகாத்மா கடைசியாக அணிந்திருந்த ஆடை, கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள், மதுரை காந்தி மியூசியத்தில் இருக்கின்றன; அதன் பாதுகாவலராக அருட்செல்வர் இருந்துள்ளார். அவரின் நுால்களை படித்து பார்த்தால் அதில், மகாத்மாவையும், வள்ளலாரையும் இரு கண்களாக போற்றியது தெளிவாகத் தெரியும். நாட்டின் பாரம்பரியம், தேசப்பற்று, மொழிப்பற்று, வீட்டில் ஒழுக்கம், நாட்டிற்கு சேவை ஆகியவற்றை ஒரு தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என உழைத்தவர் அருட்செல்வர்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, ராமலிங்கர் பணி மன்றத் தலைவர் மாணிக்கம் வரவேற்றார். செயலர் வைத்தியலிங்கம் நன்றி கூறினார்.

APJ Abdul Kalam Save Forestry program

வனம் செய்வோம் வாழ்வியல் காப்போம் 
APJ Abdul Kalam Save Forestry program – Tree Plantation Drive across Tamilnadu inaugurated by Honorable Governor of Tamilnadu Shri Banwarilal Purohit at Vels University Chennai. We are looking forward support for this project. If anybody interested please write to us contact@houseofkalam.org